Step into an infinite world of stories
இந்தப் பிரபஞ்சத்தில் பெண் என்பவள் மிகப் பெரும் சக்தி படைத்தவள். அவளால் முடியாத, எந்த ஒரு விஷயமும் கிடையாது. அவளால் சாதிக்கவும் முடியும். அழிக்கவும் முடியும் அநியாயத்தை. அநியாயங்கள்ளை எதிர்த்து நிற்பதற்கான தைரியத்தை விட, அனைவரையும் அனுசரித்துப் போகும் அந்த அன்பு தான் அவளின் ஆயுதம். அந்த அன்பால் ஒரு மிகப் பெரும் கூட்டுக் குடும்பத்தை கட்டிக் காத்து அதை மேன்மைக்கு கொண்டு வந்த ஒரு பெரும் சக்தி தர்மா. 12 வயதில் திருமணம் ஆகி குடும்பத்தில் உள்ளே நுழைந்த அவள் மாமனார், மாமியார், நாத்தனார் என்று அனைவரின் அடக்கு முறையில் சிக்கி அல்லல் படுகிறாள். அடங்கிப் போய் தன்னுடைய ஒவ்வொரு பொருளையும் சொத்துக்களையும் இழந்து கடைசியில் எதுவும் இல்லாமல் குடும்பம் இருக்கும்போது துணிந்து ஒரு முடிவு எடுக்கிறாள்.
இந்தக் குடும்பத்தை மேன்மைக்குக் கொண்டு வந்தாகணும் என்று துணிந்து, தனக்குத் தெரிந்த, சமையல் கலையைக் கையில் எடுக்கிறாள். எல்லா பெண்களுக்கும் அதுதானே கை கொடுக்கிறது. சுவாமி மலையில் சமைத்துக் கொடுத்து மெஸ் நடத்தி, கோசாலை அமைத்து, தன்னுடைய மச்சினர், கொழுந்தனார் எல்லோரையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்து தன்னுடைய குழந்தைகளையும் படிக்க வைத்து மேன்மைக்கு கொண்டு வருகிறாள்.
அவளைக் கொண்டாடும் குடும்பம். நன்றி மறக்காத குழந்தைகள். யாரும் அவளை விட்டுப் போகவில்லை. தங்களுடைய தெய்வம் என்று உணர்ந்து அவளைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். தான் நடத்திய கோசாலையில், இறுதியில் அமைதியாக அமர்ந்து விடுகிறாள். வாழ்வில் உறுதுணையாக இருந்த ஒரே இடம். நம்பிக்கையோடு வாழ்வை எதிர்த்து நிற்கும் தைரியத்தைத் தந்த இடம். எனக்கு எடுக்கும் பிறவிகள் தோறும் இதேபோல் எல்லோரிடமும் அன்பாக, அனுசரித்துப் போகும் புத்தியைக் கொடு என்று கேட்டு அந்த கிருஷ்ணனுடன் ஐக்கியம் ஆகிறாள். இதுதான் பெண் எனும் பெருஞ்சக்தி கதை.
Release date
Ebook: 5 March 2024
English
India