Step into an infinite world of stories
பொலிவான தோற்றமும் ஜொலிக்கும் நிறமும் அழகான உடலமைப்பும்தான் ஒரு பெண்ணின் அடையாளமா? பொலிவான தோற்றம் அமையப் பெறாத ஒரு பெண்ணால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதா? இந்த எண்ணம்தான், அனலும் நீ! புனலும் நீ! என்ற இந்தப் புதினம் பிறந்த கதை.
இந்தப் புதினத்தில் நாயகியான தேன்மொழிக்கு உதவி செய்பவராக மகேந்திரன் என்ற ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளேன். அவர் ரீல் இல்லை; ரியல்! ஆமாங்க! மகிழ்ச்சி எஃப்.எம் என்றொரு வலைதள வானொலி அதாவது வெப் ரேடியோ இருப்பது உண்மை. மகிழ்ச்சி எஃப்.எம்மின் நிறுவனர் திரு. மகேந்திரன் அவர்கள் என் எழுத்துப்பயணத்தில் கிடைத்த மகத்தான நண்பர், என் உடன் பிறவா சகோதரர். அவரிடம் ஏதேச்சையாகப் பேசும் போது கிடைத்த ஒன்லைன் தான் இந்தக் கதையின் கருவாக மாறிப் போனது.
இதை டெவலப் செய்து எழுத நினைத்த போது அவரை விட்டு எழுத முடியவில்லை; அவர் இடத்தில் கற்பனையாக ஒரு கதாபாத்திரத்தையும் இணைக்க மனமில்லை. அவரையே தேன்மொழியின் வழிகாட்டியாய் காட்டினால் என்ன என்று தோன்றியது. இதை அவரிடம் கேட்டு அவரிடம் அனுமதி வாங்கியே கதையில் இணைத்துள்ளேன். அவர் கொடுத்த ஒன்லைனுக்கு நான் செய்யும் சிறு நன்றியாகவே இதை நினைக்கிறேன்.
இந்தப் புதினம் உருவாகக் காரணமான, மகிழ்ச்சி எஃப் எம் நிறுவனர் திரு மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் புதினத்தை புத்தகமாக பதிப்பிக்க முன்வந்த புஸ்தகா நிறுவனர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தக் கதையை படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மேலும் இந்தக் கதையை உங்கள் நண்பர்களிடம் பரிந்துரை செய்யுங்கள்.
அன்புடன்,
அன்னபூரணி தண்டபாணி
comments2purani@gmail.com
Release date
Ebook: 10 April 2024
English
India