Step into an infinite world of stories
Fiction
‘ஜனசக்தி’யில் (1955 டிசம்பர் 11, 18, 25, 1956 ஜனவரி 1ந் தேதிய இதழ்களில்) வெளிவந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறு நூல். இந்தக் கட்டுரைகள், ராஜ்யச் சீரமைப்புக் குழுவின் சிபார்சுகளை 1955 நவம்பர் இறுதியில் சென்னைச் சட்டசபை விவாதித்த பொழுது, தேவிகுளம் - பீர்மேடு பற்றி கம்யூனிஸ்டுகள் கடைப்பிடித்த நிலையின்மீது பல்வேறு கட்சிக்காரர்களும் எதிரொலித்த எதிரொலிகளுக்குப் பதில் கூறும் முறையில் தீட்டப்பட்டவை.
அன்றையச் சூழ்நிலை வேறு, இன்றையச் சூழ்நிலை வேறு. அன்று கமிஷன் சமர்ப்பித்த ‘ரிப்போர்ட்’டின்மீது சட்டசபைகளில் விவாதம் நடந்த சூழ்நிலை. இன்று, கமிஷன் சிபார்சுமீது மத்ய அரசாங்கம் தனது திட்டவட்டமான முடிவைத் தெரிவித்துவிட்ட சூழ்நிலை. இந்தக் கட்டுரைகளில் ராஜ்யங்களைச் சீரமைக்க மொழியைப் பிரதான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறோம். எல்லையை ஜனநாயக ரீதியில் நிர்ணயிக்க தொடர்ச்சியான பிரதேசத்தையும் கிராமத்தையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறோம். இந்தக் கட்டுரைகளில், இந்த ஜனநாயகக் கோட்பாடுகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
Release date
Ebook: 3 March 2023
English
India