Step into an infinite world of stories
Fiction
கலை கலைக்காக அல்ல. கலை எந்த மக்களால் உணர்ச்சி காட்டப்பட்டு உருவெடுக்கிறதோ, எந்த மக்களுக்குப் பணிபுரிகிறதோ, அந்த மக்களுக்காகவே என்ற உண்மையை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. “ஒரு உண்மையான எழுத்துக் கலைஞனுக்கு தனக்கென்று எந்த ஒரு நல உரிமையும் கிடையாது.” பொது மக்களின் நல உரிமைதான் அவனுடைய நல உரிமை. இந்தப் பொது மக்கள் தானே உடம்பாலும், மூளையாலும் பாடுபடுகிற மக்கள்? மனித சமுதாயத்தின் பௌதீக, ஆத்மீக மதிப்பீடுகளைப் படைக்கிற பிரம்மாக்கள்? இந்தப் பாட்டாளிப் பெருமக்கள் தானே உலகத்திற்கு அதன் கோனியர் கருத்துக்களையும், ஆகச்சிறந்த உணர்ச்சிகளையும் அருளுகிற வள்ளல்கள். எனவே இன்றைய எழுத்துக் கலைஞனின் புனிதத்திலும் புனிதமான நன்மதிப்பிலும் நன்மதிப்புக்குரிய பணி எது? முன்னேற்றப் பாதையில் போராடும் பொது மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களுக்கு எதார்த்தவாதக் கலைவடிவம் தீட்டுவதும், இதர பகுதி மக்கள் அம்மாதிரியான போராட்டங்களிலும் நன்முயற்சிகளிலும் ஈடுபட உணர்ச்சி ஊட்டுவதும், மனித வர்க்கம் முழுவதும் அமைதியிலும் மகிழ்ச்சியிலும் திளைத்து இன்பக் கடலாடப் பணிபுரிவதும் ஆகும்.
Release date
Ebook: 24 April 2023
English
India