Step into an infinite world of stories
Fiction
‘கையில் ஒரு விளக்கு' - இந்தக் கதை வெளி வந்தவுடன் புத்தகத்தை நண்பர்களின் கையில் கொடுத்து, 'டால்ஸ்டாயைப் படித்துப் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இதைப் படிக்க முடியும்' என்று சொன்னேன். அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அதற்குரிய சரித்திர, சமூக, ஆன்மீக பரிமாணங் களோடு விளக்கியும் அவை ஒவ்வொன்றும் அவர் காலத்தில் என்ன அவலத்தில் வீழ்ந்து கிடந்தன என்று உணர்த்தியும் எழுதியிருக்கிறார்.
கல்விபற்றிய - புதியகல்வி பற்றிய விவாதங்களை என்னைச் சுற்றிலும் நிறைய நிகழ்கிறபொழுது, பள்ளிக்கூடமே போய் அறியாத நான் இப்படி ஒரு கதையை எழுதியிருப்பது எனக்கே வியப்புத் தருகிறது. இந்தக் கதையில் வரும் கல்வி அனுபவங் களெல்லாம் என்னுடைய கல்வி அனுபவங்கள் அல்லவென்பதை என்னை அறிந்த வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மேலும் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எனது கதைகளில் வருகிற எல்லா அனுபவங்களுமே இப்படித்தான்; அவை வெறும் சொந்த அனுபவங்கள் அல்ல. என்னைச் சேர்ந்தோரின், எனது கால மக்களின், என்னோடு சேர்ந்து வளர்ந்தும் வாழ்ந்தும் என்னையே மேன்மைப்படுத்தும் உங்களுடைய அனுபவங்களைத்தான் நீங்கள் அறியாமல் நான் அபகரித்துக் கொண்டுபோய் நன்கு அலங்காரம் செய்து மீண்டும் உங்களிடமே திரும்பத் தருகிறேன் என்பதுதான் அது. எனக்கு இந்தக் கதையைவிட அதில் வரும் கஸ்தூரி அம்மையாரைத் தான் பிடித்திருக்கிறது.)
Release date
Ebook: 7 July 2022
English
India