Step into an infinite world of stories
History
இலக்கியங்களில் வரும் குறிப்பைக் கொண்டு வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பதற்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் பரந்த அறிவும் ஆழ்ந்த புலமையும் வேண்டும். இந்த இரண்டும் நிறையப் பெற்றவர் ஆசிரியர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள். சங்க நூல்களையும் இடைக்கால இலக்கிய-இலக்கணங்களையும் முறையோடு பூரணமாகக் கற்றுத் தேர்ந்து பண்டிதப் பரீட்சையில் வெற்றி பெற்றவர் திரு. நா. பார்த்தசாரதி.
சங்க இலக்கியங்களில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு மூன்று தமிழ் மன்னர்களின் தலைநகரங்களைப் பற்றியும் தனித்தனியே மூன்று நாவல்கள் எழுத வேண்டும் என்ற திரு. நா. பார்த்தசாரதியின் திட்டப்படி மூன்றாவது நாவல் இது. ‘மணி பல்லவம்’ சோழப் பேரரசின் தலைநகரைப்பற்றிப் பேசுகிறது. பாண்டியர்களின் பழம்பெரு நகரான ‘கபாடபுரம்’ இரண்டாவது நாவலாக உருப்பெற்று விட்டது. கடல் பிறக் கோட்டிய சேரர் பெருமான் செங்குட்டுவனின் காலச்சூழ்நிலையை விளக்குகிறது இந்த ‘வஞ்சிமாநகரம்’.
Release date
Ebook: 7 July 2022
English
India