Vandhiyathevan Vaal - Audio Book Vikiraman
Step into an infinite world of stories
சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று வண்மையிலும் திண்மையிலும் சிறந்து நின்றான். அவன் இயல்புகளைப் பத்துப்பாட்டில் உள்ள மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்ற இரண்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன. அவன் வரலாற்றோடு தொடர்புடைய பாடல்கள் பல புறநானூற்றில் இருக்கின்றன. அவனே பாடிய செய்யுள் ஒன்றும் அத் தொகை நூலில் இடம் பெற்றிருக்கிறது. அவனுடைய வரலாறே இது.
பழம்பெரு மன்னர்களையும் புலவர்களேயும் இலக்கியத்துக்குள் நுழைந்து அறிந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்தகைய நூல்கள் அவர்களின் பெருமையை உணர்ந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.
Release date
Ebook: 7 October 2021
English
India