Step into an infinite world of stories
திருவரங்கன் உலா என்னும் சரித்திர நாவல் உண்மை சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்ற ஒன்று
இதன் முதல் இரண்டு பாகங்கள் சென்ற வருடம் ஒரு ஒலிப்புத்தகமாக வெளி வந்தது
அரங்கனின் ஊர்வலம் அரங்கத்தை விட்டுப் புறப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கமாநகரை அடைந்தது
இதற்கிடையில் அவரும் அவரை சுமந்து சென்ற மக்களும் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல ஆனால் அரங்கனை காப்பது ஒன்று தான் ஒரே குறிக்கோள்
முதல் இரண்டு பாகங்களில் அரங்கன் மேல் கோட்டை சென்று அடைந்து விட்டார்
அடுத்த இரண்டு பாகங்களில் திருப்பதி சந்திரகிரி மலைத்தொடர்களில் பயணித்து சிங்கவரம் அடைந்து சில ஆண்டுகள் தங்கி பின்னர் திருவரங்கத்தை அடைகிறார்.
இதன் சுவையான உணர்ச்சிகரமான சம்பவங்களை தெரிந்து கொள்ள நாம் அடுத்த இரு பாகங்களை கேட்க வேண்டியது அவசியம்
சமீபத்தில் வெளி வந்துள்ள ஒலிப்புத்தகத்தின் இந்த பகுதிகள் ராணி கங்காதேவி இயற்றிய மதுரா விஜயம் என்ற நூலினை தழுவி எழுதப்பட்டது.
முதல் இரண்டு பாகங்களை கேட்டவர்கள் இந்த மதுரா விஜயத்திற்கு காத்திருக்கின்றனர்
அவசியம் பெற்றுக் கொள்ளுங்கள்
Release date
Audiobook: 23 July 2022
English
India