Step into an infinite world of stories
டீனா ஒரு குட்டி பொண்ணு. ஒரு நாள் டீனா அவங்க பாட்டி கூட ஷாப்பிங் போயிருந்தப்போ அங்க நீல நிறத்தில ரொம்பவே பிரகாசமான ஒரு கெட்டில் இருந்ததை பார்த்தாள். அது ஒரு சாதாரண கெட்டில் இல்லை. அந்த கெட்டில்.. நாகரிகங்கள், கலாச்சாரங்கள் பத்தியும், அப்புறம் சில இடங்கள், நிறைய கால மண்டலங்களை பத்தி தெரிஞ்சுக்கவும் டீனாவுக்கு உதவியா இருக்கும். அட ! என்ன ஒரு மேஜிக் கெட்டில் இல்ல.!! சரி, டீனாவால இந்த மேஜிக் கெட்டிலோட சக்திகளை பயன்படுத்த முடியுமா..? வரலாற்றையும் கால பயணத்தின் கதைகளையும் இணைக்கக்கூடிய ஒரு புத்தகத் தொடரின் முதல் பக்கம் தான் இது. “டீனாவும் அவளின் மேஜிக் கெட்டிலும்”- இத்தொடரை கேட்கும் வாசகர்கள் அதிசயங்களின் உலகத்துக்கே சென்று வருவார்கள். மேலும் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் புதுமையா இருக்கும். மிகவும் ஆர்வமுடைய ஒரு ஏழு வயது சிறுமியின் கண்களால், பழைய காலத்தின் மந்திரங்கள் நினைவுக் கூறப்படுகிறது. நவீன உலகம் அறியாத, ஒரு கடந்த கால பகுதிக்குள் செல்லும் ஒரு சிறுமி அனுபவிக்கும் சாகசங்கள், மறக்க முடியாத ஒன்று.
Translators: Meena Ganeshan
Release date
Audiobook: 23 February 2022
English
India