Step into an infinite world of stories
Romance
ஜ்வாலாவும் சகுச்தலாவும் உடன் பிறந்த சகோதரிகள் .ஜ்வாலாவின் கணவன் ஒரு விமான விபத்தில் இறக்க இவர்களின தந்தைக்கு விமானி என்றாலே ஒரு வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக சகுந்தலா, ரகு என்கிற ஒரு பைலட்டை மனப் பூர்வமாகக் காதலிக்க இதை அறியாத இவள் தந்தை காசி என்கிற தன் நண்பனின் மகனுக்கு மணம் பேச இதைச் சொல்ல முற்படும் வேளையில் ஜ்வாலா தன் கணவனின் இறப்பு காரணமாக மன உளைச்சலுக்கு ஆட்பட்டு மரிக்கிறாள்.
சகுந்தலா தந்தையின் மனத்தை நோக அடிக்க விரும்பாமல் மௌனம் சாதிக்க.... தன் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்ட ரகுவிற்கு இது தெரியாமலே போக ...பல விபரீதங்கள்.
ரகு திரும்புவதற்குள் சகுந்தலா காசி திருமணம் நிறைவேற ....சகுந்தலா விரும்பியபடியே தன் வேலையை விட்டு விட்ட ரகு சகுந்தலாவைத் தேடி வர.....
என்ன நடந்தது ?
இவர்களின் சந்திப்பு நிகழ்ந்ததா ?
காசிக்கு உண்மை தெரிந்ததா ?
சகுந்தாலாவின் மண வாழ்வு என்னவாயிற்று?
அத்தியாயங்களின ஆரம்பத்தில் கவிதாயினி ரோகிணியின் கவிதை வரிகள் அழகு சேர்க்க நாவலே அழகு என்பது புரியும் .படியுங்கள். ரசியுங்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India