Step into an infinite world of stories
Romance
இவரைப் பற்றி... இவரது மூதாதையர்கள் வசித்த ஊர் மாமண்டும் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது காஞ்சியில் தான் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே காஞ்சிபுரம் தான். வங்கிப் பணியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதை வேந்தர், சிறுகதை நன்மணி, சிறுகதை செம்மல், பாரதியார் விருது போன்றவை இவர் பெற்ற விருதுகளாகும். சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், நடிகர் என்ற பலவேறு கோணங்களில் இவருக்கு பரிச்சய முண்டு. சன் தொலைக்காட்சி, புதுவை தொலைக்காட்சி, சென்னை பொதிகை, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக் காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. “இவன் தந்திரன்" என்ற படத்தில் நூலகராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். "தீ பரவட்டும்" என்ற குறும்படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு. இவரது நாவல்கள் கண்டிப்பாக வாசகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இவர் மேன்மேலும் தொடர்ந்து பல படைப்புக்களை எழுதி வாசக வாசகிகளின் பாராட்டுக்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம். அவள் ஒரு பூந்தொட்டி, மனம் போன போக்கிலே, நிஜம் போன்ற பொய், பணமா பாசமா என்பவை உள்ளிட்ட பல நாவல்களும், வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்து, அரசு நூலகங்களில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வார இதழ்களில் இவரது எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துள்ளன.
Release date
Ebook: 11 December 2019
English
India