Step into an infinite world of stories
இப்படியான இடங்களில் மட்டுமே நிகழ வேண்டும் என்ற நியதிகளோ, இவ்வளவு தாக்கத்தை தான் ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்களோ… இத்தகைய காலம் தான் உனக்கானது என்பதான வரையறைகளோ… இயற்கையின் நிகழ்வுகளுக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவை சூழலின் பொருட்டும், நிலவி வரும் காலநிலையின் பொருட்டும் தன்னியல்பாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இத்தகைய பண்புகளிலிருந்து எவ்விதத்திலும் மாறுபடாதவையே மழையும் அதன் தாரைகளும்…
அப்படிப் பொழியும் மழையின் மொத்த நீரும் பூமியை அடைவதில்லை.. அதில் ஒரு பகுதி பாதியிலேயே நீராவியாகி விட.. மீதமாகும் துளிகள் பூமியை வந்தடைகின்றன. அவைகள் மலையின் உயரங்கள், பூமியின் பரப்புகள், கடலின் ஆழங்கள், புல்லின் விளிம்புகள் என எங்கு வேண்டுமானாலும் விழலாம்… சில வினாடிகளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ எவ்வித பயனுமின்றி மறைந்தும் போகலாம். ஆனால், காட்டில் விழும் மழையின் துளிகள் அப்படியானவை அல்ல. ஒவ்வொரு துளியும் அதற்கான பயனை அடைந்தே தீரும் என்பதற்கு அழிந்து வரும் அடர் காடுகளே நமது கண்கூடு. அப்படித் தன்னலமற்ற மழையின் துளிகளையொத்த மனிதர்கள் உலவும் கதைக் களம்.
Release date
Ebook: 17 May 2021
English
India