Step into an infinite world of stories
‘ஜுராசிக் கார்க்’ திரைப்படத்தின் மூலமாயும் நாவலின் மூலமாயும் அண்மைக் காலத்தில் நமக்கெல்லாம் பிரபலமானவர் நாவலாசிரியர் மைக்கேல் க்ரைட்டன். ஆயினும் ஆங்கில நாவல்களை - குறிப்பாக, ஸயன்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் விஞ்ஞானக் கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு வெகு காலமாகப் பரிசயமுள்ள படைப்பாளி இவர்.
அமரர் எஸ்.ஏ.பி., ‘The Terminal Man’ என்ற நாவலைப் படித்து ரசித்து தமிழில் மொழி பெயர்க்கும்படி என்னைப் பணிந்தார். விஞ்ஞான விஷயம் என்றாலே எனக்குக் கைகால் உதறும். தட்டித்தடுமாறி எப்படியோ - அவர் இட்ட பணியைச் செய்து முடித்தேன். 1975-ஆம் ஆண்டு, இருபத்தேழு வாரம் இது தொடர்கதையாக வெளிவந்தது. எங்கு பிழைகள் இருக்கிறதோ -தெரியவில்லை. ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் என்னை மன்னிப்பார்களாக.
- ரா.கி.ரங்கராஜன்
Release date
Ebook: 18 May 2020
English
India