Step into an infinite world of stories
எதைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும், எதை எழுதினாலும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று அமரர் எஸ்.ஏ.பி. வற்புறுத்தி வந்த காலத்தில் இந்த ‘ஹவுஸ்ஃபுல்’ தொடரை எழுதினேன்.
வேண்டுமென்றே நாலாவது அத்தியாயத்தில் 2 கதையை ஆரம்பித்து, ‘இதற்கு முன் என்ன நடந்தது?’ என்ற கேள்வியுடன் அந்த அத்தியாயத்தை முடித்து, பிறகு மூன்றாவது அத்தியாயத்தையும், அதன்பின் இரண்டாவது அத்தியாயத்தையும், பிறகு முதலாவது அத்தியாயத்தையும் எழுதி, ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து வரிசையாக எழுதினேன். கோமாளித்தனமான காரியம்தான். ஆனால் லட்சக் கணக்கான வாசகர்கள் ஆவலுடன் படித்தார்களே தவிர, யாரும் குழம்பவில்லை. முணுமுணுக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று. ஐந்தாவது அத்தியாயம் ஆரம்பித்த போது, முந்தின நாலு கதையின் சுருக்கத்தையும் கொடுத்தேன்.
‘ஹவுஸ்ஃபுல்’ என்ற தலைப்பைப் பார்த்து, இரண்டு மூன்று வருஷத்துக்குமுன் வெளிவந்த ஒரு தமிழ்திரைப்படத்தின் கதை இது என்று சிலர் நினைக்கக்கூடும். அப்படியல்ல, நாற்பது வருஷத்துக்கு முன் கொடுக்கப்பட்ட தலைப்பு இது.
பிரபலமான தலைப்பைச் சினிமாக்காரர்கள் சுலபமாகக் கையாளுவது இன்று வழக்கமாகிவிட்டது.
‘யவன ராணி’ என்ற தலைப்பை ஒரு சினிமாக்காரர் கையாடிய போது சாண்டில்யன் மிகவும் போராடிப் பார்த்தார். சட்டப்படி எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு கையாடல்காரர்களுக்கு ஒரு தைரியம் வந்துவிட்டது. இறவாப் புகழ்பெற்ற படைப்பாளியான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கூட ஒரு தமிழ் சினிமாவிற்கு இன்று தலைப்பாகிவிட்டது. நான் எந்த மூலை?
- ரா.கி.ரங்கராஜன்
Release date
Ebook: 18 May 2020
English
India