Step into an infinite world of stories
Fantasy & SciFi
காலையில் அந்த அதிர்ச்சிகரமான சேதி வந்தது! உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லிங்கம் என்ற ஒரு ஆள் மட்டும் அதிகாலையில் இறந்துவிட்டான் என்ற தகவல்! குடும்பமே ஆடிப் போனது! லிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற தகவலும் வந்தது! இந்திராவுக்கு மயக்கமே வந்தது! ஒரு மணி நேரத்தில் தொழிலாளிகள் பட்டாளம் ஒன்று வீட்டின் முன் கூடிவிட்டது! “லிங்கத்தைக் கொன்னுட்டீங்க! அவர் குடும்பத்துக்கு என்ன நஷ்ட ஈடு தரப்போறீங்க? எங்களுக்கு உறுதிமொழி தர்றவரைக்கும் போகமாட்டோம்!” வீட்டின் முன் உட்கார்ந்துவிட்டார்கள். குடும்பம் மொத்தமும் உறைந்து, பயந்து -பாதி மரித்துப் போயிருந்தது! கதிர் வெளியே வந்தான். “கண்டிப்பா செய்யறோம். உடனடியா நாங்க பணத்துக்கு எங்கே போவோம்?” “ஏன்? பெரிசா வீடு எழும்புதே! அதை வித்து செட்டில் பண்ணு!” “இல்லைனா, கடனை வாங்கு. ஏதோ ஒண்ணு செய்!” பலவிதமான கூச்சல்கள். கதிர் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டான். வந்து விட்டார்கள். “எல்லாரும் கலைஞ்சு போங்க!” “மாட்டோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்! அதுவரைக்கும் போகமாட்டோம்!“இது தொழிற்சாலை இல்லை! தனி மனிதர்கள் வாழற வீடு! அவங்களும் 24 மணி நேரத்துல எதையும் செஞ்சிட முடியாது! முறையா பேசி, சட்டப்படி என்ன செய்யணுமோ செய்வாங்க! நாங்களே வாங்கித் தர்றோம்!” போலீஸ் வந்து பேசியதும் கூட்டம் மிரண்டது! கலைந்து போனது! போலீஸ் அதிகாரி உள்ளே வந்தார். “நிச்சயமா ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்! குறிப்பா, செத்துப் போன லிங்கத்தோட குடும்பத்துக்கு நீங்க பெரிய நஷ்ட ஈடாத் தரவேண்டியிருக்கும்! கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்ணிக்குங்க!” “......!” “தொழிலாளிகளை ஏமாற்ற முடியாது. கூடாது! அப்புறம் கடல் மாதிரி அவங்க பொங்கிட்டா, நாங்களே கட்டுப்படுத்த முடியாது. ரெண்டாவது - இது அரசியலாயிட்டா, இன்னும் விபரீதம். உங்க குடும்பத்து மேல வச்ச மரியாதை காரணமா, உங்களை நான் எச்சரிக்கறேன்!” ரமணி தலையாட்டினான். இந்திரா கலவரம் பொங்க நின்றாள்
© 2024 Pocket Books (Ebook): 6610000510566
Release date
Ebook: 16 January 2024
English
India