Step into an infinite world of stories
Fiction
மாதாமாதம் காசு கட்டி ஏஸிக் குளிரூட்டிய கூண்டு அறையில் சுவரைப் பார்த்துக்கொண்டு இயந்திரத்தில் நடப்பதைக் காட்டிலும் வீதியில் இறங்கி சுதந்திரமாக நடப்பது ஒரு சுகானுபவம். பருமனான உடம்பு இளைப்பதற்காகவோ, “ஃபாஸ்டிங் ஷுகர் இருநூறுக்கு மேலே ஷூட்டப் ஆயிருச்சி… தெனம் ஒரு மணி நேரம் நடந்தேயாகணும்” என்று டாக்டரின் விரட்டுதனாலும் நடக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுபவர்கள் மட்டுமில்லாமல் கைகால் முளைத்த சகலரும் காலை எழுந்தவுடன் ஒருமுறை முகத்தை வருடும் இயற்கைக் காற்றோடு வீதியுலா வருவது தேகப்பயிற்சியோடு அன்றாட வாழ்வின் யதார்த்தங்களை நமக்குப் பாடமாகப் புகட்டுகிறது. இந்தப் புத்தகத்தில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் இதைப் படிக்கும் வாசகர்கள் தங்கள் அனுபவத்தில் எங்காவது நிச்சயம் கண்டிருக்கலாம். கோபுச்ச யதி, ஜடபரதர், பாரதியார், புலவர் கீரன், திருக்குறள், Aldous Huxley, சினிமா, பொன்னியம்மன், மெதுவடை என்று பல தினுசு விஷயங்களின் கலவை இது. இதைப் படிப்பவர்கள் மானசீகமாக என்னுடன் நடந்துவரும் போது சிரிப்பும் சிந்தனையும் ஒரு சேர ஏற்பட நூறு சதம் வாய்ப்பிருக்கிறது. வாங்க நடக்கலாம்!
Release date
Ebook: 1 June 2022
English
India