Step into an infinite world of stories
Fiction
கவிஞர் மீரா, எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி இருவரும் இவரின் கலை இலக்கிய பயணத்தை துவக்கி வைத்தவர்கள். இவரது புத்தகத்தை பாராட்டி கவிஞர் தமிழச்சிதங்கப்பாண்டியன், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் மீரா ஆகியோர் குறிப்பிட்டிருப்பதை வாழ்வின் சிலிர்ப்பான தருணங்கள் என பதிவு செய்கிறார்.
ஏழு குறுநாவல்கள் எழுதியிருக்கிறார். சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் என்கிற நூலை எழுதியிருக்கிறார். இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ‘தி. குலசேகர் கதைகள் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரது கதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவரின் சிறுகதைகள்டி.வி.ஆர் நினைவு இலக்கியம், நீலமலை தமிழ்ச்சங்கம், லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியம் போன்ற விருதுகள் பெற்றிருக்கிறது. ஜே.சி இயக்கம் ‘ரைசிங் ஸ்டார் என்கிற விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. புதிய முயற்சியாக உலகின் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இங்கே நாவல் வடிவில் ‘ட்ரான்ஸ் கிரியேட்டிவ்’ வகை இலக்கியமாக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக ‘உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். சந்தோஷ்சிவனின் மல்லி, டெரரிஸ்ட் படங்களுக்கு எழுத்து வடிவம் தந்து நூலாக்கியிருக்கிறார்.
ரேவதி நடித்து, இயக்கிய டெலிஃபில்ம்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சில தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரப்படத்திலும் எப்பிசோட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறார். கவிஞர் லீலாமணிமேகலையிடம் தமிழக பழங்குடியினர் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். நீ+நீ=நாம் என்கிற குறும் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.
இயக்குநர் ரா.பார்த்திபனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். திரைமொழியின் மீதுள்ள தீராத காதலினால் உயிர்த்திருக்க முடிந்திருப்பதையே தனக்கான தவமும்வரமும் என்கிறார்.
Release date
Ebook: 3 January 2020
English
India