Step into an infinite world of stories
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
கல்கண்டு ஆசிரியர் திரு. லேனா தமிழ்வாணனின் பளிச் என்ற பதில்கள், தெளிவான அவர் கருத்துக்களைச் சுமந்த கட்டுரைப் பல்லக்குகள், சிறிய வயதிலேயே பத்திரிகையுலகச் சாதனைகள் என்று... அவர் மேல் ஒரு தனி இதமான அபிப்பராயமும், அறிமுகமற்ற அன்பும் இருந்தது.
சில விழாக்களின் போது ஒன்றிரண்டு சந்திப்புக்களிலேயே, ஒன்றிரண்டு வாக்கியங்களிலேயே அந்த அபிப்பராயம் வைரஸ் மாதிரி பலமடங்காக அபிவிருத்தியானது.
அப்புறம் அவரின் இனிமையான பொறுப்பான, தாமதமற்ற கடிதங்கள் இன்னும் நெய் ஊற்றி...
இன்று... இன்னும் ஒரு அரைமணி நேரம் கூட அமர்ந்து பேசாத நல்ல நண்பர்கள் நாங்கள்.
லேனாவைப் பற்றி இத்தனை எழுத... இந்த நாவல் கல்கண்டில் தொடராக வந்தது தான் காரணம் என்று அற்ப சிந்தனைகள் வேண்டாம். அநாவசியப் புகழாரம் எனக்குப் பிடிக்காதது. அவசியமற்றதும்கூட. அவசியப் புகழாரத்தை அலட்சியப்படுத்துவது தான் அநாவசியம். (இந்த வாக்கியத்தில் குழப்பம் அடைபவர்கள் மன்னிக்க)
லேனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களாவன... 1, 2, 3, 4... என்று பட்டியல் தரலாம். ஆனால் தருவதாய் இல்லை. தந்து விட்டால் அவற்றைக் கடைபிடித்து அத்தனை பேர்களும் லேனாக்களாகி விட்டால்... அவருக்கு ஏது சிறப்பு?
அப்புறம்?
யார் யாருக்கு நன்றி சொல்வேன் என்பது தான் உங்களுக்குத் தெரியும். தனியாக எழுதத் தேவையில்லை.
- பட்டுக்கோட்டை பிரபாகர்,
Release date
Ebook: 15 September 2020
English
India