Step into an infinite world of stories
3.4
Biographies
இடிஅமீனின் கொடுங்கோன்மைக்கு அவனது பிறப்பு, வளர்ப்பு, அவனுக்குக் கிடைத்த வசதிகள், அதிகாரங்கள் எல்லாம்தான் காரணம் என்பதை பல உண்மைச் சம்பவங்கள் மூலமாக இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறேன்.
வழக்கமான முறைகளிலிருந்து இந்தப் புத்தகம் மாறுபட்டிருக்கலாம். ஒரு துவக்கம், ஒரு விளக்கம், பிறகு வணக்கம் என்ற வரைமுறைக்கு அப்பாற்பட்டு, அந்த வரம்புக்கு வெளியே வந்து பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பாகவே இப்புத்தகத்தை எழுதியிருக்கிறேன். சம்பவங்களை விளக்குவதற்காக கற்பனை உரையாடல்களைப் புகுத்தியிருக்கிறேன்.
தகுதியே இல்லாத தனக்கு, நாட்டின் மிக உயர்ந்த பதவி கிடைத்திருக்கிறதே, அதைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே என்ற அக்கறையோ, பொறுப்புணர்வோ இல்லாதவன் இடி அமீன்.
வன்முறையால், பல யுக்திகளுடன் அப்பதவியைக் கைக்கொண்ட அவன், அழிவு வழியில் தன் திறமைகளைச் செலவிட்டதால்தான் உலகம் அவனைத் துரத்தியடிக்கும்படி ஆனது.
அவன் யாருக்காகவும் எதற்காகவும் தன் போக்கை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படியே மன அழுத்தத்தின் காரணமாகப் பணிந்து போக ஓரிரு முறை அவன் முயன்றாலும், மனசுக்குள்ளிருந்து சாத்தான் விஸ்வரூபம் எடுத்து அவனை ஆட்டிப் படைத்துவிடும்.
நல்லவேளையாக, அவனுடைய சர்வாதிகார சரித்திரம் ஓய்ந்த பிறகு, அதாவது 1983ம் ஆண்டிற்குப் பிறகு புதிதாக ஒரு சர்வாதிகாரி உலகின் எந்த மூலையிலும் இதுவரை தோன்றவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
அன்புடன்,
பிரபுசங்கர்
Release date
Ebook: 5 February 2020
English
India