Step into an infinite world of stories
3.2
Religion & Spirituality
இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை இராமாயணம், மகாபாரதம் ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்ற அடிப்படையான இரண்டு விஷயங்களுக்கும் ககைள் மூலம் விடை தருபவை இந்த இதிகாசங்கள் என்றால் அது மிகையாகாது.
இராமாணயம், மகாபாரதம் இவை இரண்டுமே நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளத் தேவையான ஏராளமான நீதிகளை நமக்குச் சொல்லுகின்றன. இந்த இரண்டு நூல்களிலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இராமாயணம் ஒரு பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம்.
“இராமாயணக் கதைகள்” என்ற நூலினை உங்களுக்காக எளிய நடையில் எழுதியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை என யார் வேண்டுமானாலும் இந்த நூலைப் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். இத்தகைய நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.
“இராமாயணக் கதைகள்” என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.
Release date
Ebook: 17 May 2021
Tags
English
India