Step into an infinite world of stories
"இது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று கதை. இக்கதையில் நிகழும் சம்பவங்கள் சென்னை, காஞ்சி, ஆற்காடு, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சை என நம்மை சுற்றியே நிகழ்ந்துள்ளது.மிகச்சிறந்த மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும், வீரர்களையும் பெற்ற நமது புண்ணிய பூமி, ஆறாயிரம் மயில்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது? வியாபாரிகளாக வந்த சிறு கூட்டத்தினரால் எப்படி சாம்ராஜ்யம் அமைக்கமுடிந்தது என்ற கேள்விகளுக்கான பதில் தான் ராஜபேரிகை
ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஆரம்பிக்கும் கதையின் நாயகன் விஜயகுமாரன் தஞ்சை மன்னர் ராஜா பிரதாப் சிங்குடன் சேருகிறான். அவனுக்கு மன்னனின் வாரிசு “வாள் மகள்” என அழைக்கப்படும் நந்தினியின் காதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகும் சந்தர்ப்பம் அமைகிறது. ஆங்கில வீரன் ராபர்ட் கிளைவின் நட்பு கிடைக்கிறது. ஆங்கிலேயர் காலூன்ற போராடும் அதேநேரம் பிரெஞ்சுஆதிக்கமும் ,கவர்னர் டூப்ளே தலைமையில் வேரூன்ற போராடுகிறது.
ஆற்காடு நவாப் சந்தா சாகிப், ராணி மீனாட்சியின் மரணம் ,அவள் வளர்ப்பு மகன் கதையின் நாயகன் விஜயகுமாரின் சபதம் என பல உப கதைகள். இறுதியில் யாருடன் விஜய குமாரன் இணைகிறான்? அவன் சபதம் என்ன ? அது யார் உதவியால் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பதை கதை விறுவிறுப்பாக விளக்குகிறது .
அண்ணிய மண்ணிலும் நேர்மை நியாயம் உண்டு ,சொந்த மண்ணிலும் துரோகம் சூழ்ச்சி உண்டு எனும் கசப்பான உணர்வுகளை பிரதிபலிக்கும் சில கதாபாத்திரங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டதிற்கு முக்கிய காரணம் சிற்றரசர் களுக்கு இடையே இருந்த ஒற்றுமை இன்மையும், சுயலாபத்திற்காக அந்நியருடன் சேர்ந்து கொண்டு நம்மை காட்டிக்கொடுத்த துரோகி களுமே என்பதையும் ஆற்காடு நவாப்புகள் தஞ்சை, மதுரை போன்ற இந்து சாம்ராஜ்ஜியங்களை விழுங்க முற்பட்டிருக்காவிட்டால் க்ளைவோ, டூப்ளேயோ முளைத்திருக்கமுடியாது என்பதையும் எடுத்தியம்புகிறது. காதல் ,வீரம் ,துரோகம் என பல உணர்வுகளை கொண்ட இந்நூல் பல சுவையான திருப்பங்களை கொண்டுள்ளது."
© 2022 Storyside IN (Audiobook): 9789354345210
Release date
Audiobook: 16 March 2022
English
India