Parinaamam Jeyamohan
Step into an infinite world of stories
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூகம் போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதை காணமுடிகிறது. இக்கதைகள் தான் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக்கதைகளும்கூட - ஜெயமோகன்.
Release date
Audiobook: 15 April 2022
English
India