Step into an infinite world of stories
கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில், ரவுடி மாணவனான பச்சீஸ்வரன், மந்திரி மகனை எதிர்த்து நின்று வெல்கிறான். மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக பேராசிரியர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் அடிக்கடி மோதுகிறான். பிரின்ஸிபாலுடன் நேரடியாக மோதி அவரது வெறுப்பையும் சம்பாதிக்கிறான். அவனது தொந்தரவு தாங்க முடியாத ஒரு பேராசிரியர் தன் வேலையையே ராஜினாமா செய்து விட்டு, ஊரை விட்டே போகிறார்.
அவனைச் சுற்றி எதிரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இந்தச் சூழ்நிலையில், அவனைக் கொல்லப் போவதாக அவனது ஹாஸ்டல் அறைக்குள் ஒரு கடிதம் வந்து விழுகின்றது. அந்தக் கடிதத்தை எழுதியது யார்? என்பதைக் கண்டுபிடிக்க அவனும் அவனது சகாக்களும் முயற்சி செய்கின்றனர்.
ஒரு நாள், யாரும் எதிர்பாராத விதமாய் பச்சீஸ்வரன் சாலையோர மரத்தில் தூக்கில் தொங்குகிறான். அவன் தலையில் ஊதா நிற ஹெல்மெட் மாட்டப்பட்டிருக்கின்றது.
அது கொலையா?....தற்கொலையா?...கொலையென்றால் கொலையாளி யார்? என்பதை போலீஸ் துப்பறியும் விதத்தை மிகவும் சுவாரஸியமாக, ஒரு திரைப்படம் போல் கொண்டு சென்றிருக்கின்றார் நாவலாசிரியர்.
Release date
Audiobook: 3 September 2022
English
India