Step into an infinite world of stories
சரித்திர நாவல் என்றதும், சோழனும், பாண்டியனும், சேரனும், கத்தியும், குதிரைகளும் கச்சை கட்டிய பெண்களும்தான் என்பதாகப் பரவலான ஒரு எண்ணம் நிலவுகிறது. சரித்திர நாவல் என்கிறபோதே பின்னணியில் குதிரையும், வாளேந்திய வீரனும் நிற்பான். இவை மட்டுந்தானா சரித்திரம்? அதுவும் இந்திய சரித்திரம் ? 1948-இல் மகாத்மா காந்தியின் அகிம்ஸா யுத்தம் சரித்திரமில்லையா? சீன, பாகிஸ்தான் யுத்தங்களில் சரித்திரமில்லையா? ஏன், - இப்போதைய பஞ்சாப் இராணுவ நடவடிக்கை நாளையச் சரித்திரமில்லையா?
இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட இந்தப் பஞ்சாப் கலவரத்தையும் - ராணுவ நடவடிக்கை பற்றியும் தமிழ் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் - ஆர்வத்தில் பஞ்சாப் இராணுவ நடவடிக்கையை முக்கியமாக வைத்து மற்ற கதாபாத்திரங்களை மேற்பூச்சாக்கிக் கட்டப்பட்ட கட்டிடம் இந்த 'நெருப்பு மலர்'. இரண்டாம் உலக யுத்தத்தை விவரிக்கிற அமெரிக்க நாவல்களையும், ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளையும்யும், மிலா-18, எக்ஸோடஸ் போன்ற அது போல் தமிழில் ஒன்றை எழுதுகிற வாய்ப்பு இல்லையே என்று நினைத்துக் கொள்வேன். பஞ்சாப் ராணுவ நடவடிக்கையான Blue Star Oneration அதை ஓரளவு தீர்த்து வைத்துவிட்டது. வெறும் ராணுவ நடவடிக்கை பற்றியும், பொற்கோவில் ஆயுதக்கிடங்காக மாறின விதமும், பிந்தரன் வாலே பற்றியும் டெல்லி மேலிட உணர்வுகளைப் பற்றியும் மட்டுமே எழுதிக் கொண்டு போனால் அது வெறும் கட்டுரை.
இது போல் ஒரு புவனேஸ்வரி, கிருத்திகா அர்ஜுனையும் - அர்ஜுன் மூலமாக ஜெனரல் வைத்யா Blue Star 0peration - ஐ வெற்றிகரமாக நடத்தத் திட்டம் வகுத்துத் தந்த லெஃப்டினண்ட் ஜெனரல் சுந்தர்ஜி, அவரின் வலதுகரமான ரஞ்சித்சிங் தயாள், இவர்களின் திட்டத்தை இம்மி பிசகாமல் நடத்திக் கொடுத்துத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் குல்திங்சிங் பிரார், அர்ஜுனைப் போன்ற ஆயிரமாயிரம் வீரர்கள்...
இவர்கள் எல்லோரும் சரித்திர புருஷர்கள்தான். Blue Star Operation சரித்திரத்தில் இடம் பெறப் போகும் நிகழ்ச்சிதான். அதனால் இதுவும் ஒரு சரித்திர நாவல்தான். முதல் முதலாக ஒரு சரித்திர நாவல் எழுதின பெருமையை, சந்தோஷத்தை 'நெருப்பு மலர்' எனக்குக் கொடுத்திருக்கிறது.
Release date
Ebook: 5 February 2020
English
India