Step into an infinite world of stories
உல்லாசமாக வாழ்க்கையை கழிக்கும் ஒருவன் நண்பனின் வீட்டு திருமணத்தில் கலந்துக் கொள்ள ஏற்காட்டுக்கு வருகிறான். எதிலும் சவால்விட்டு ஜெயித்து காட்டுபவன் அவன். அவன் முன்னால் அவனது நண்பனிடம் அவனது நண்பனின் அத்தை மகள் நதியா சொந்தமாக பேசுகிறார். அது நண்பன் கர்வம் கொள்கிறான். அதை கண்ட அவன் நண்பனின் முன்னிலையிலே அவனை சொந்தம் பாராட்டி நதியா பேச வேண்டும் என்று மனதுக்குள் சபதம் கொள்கிறான். அதன்படி நதியாவிடம் நண்பனுக்கு தெரியாமல் பேசி பழகி அவளது மனதை ஜெயிக்க விடுகிறான்.
அவன் சபதம் செய்து சவாலில் ஜெயிக்க தான் அவளை காதலிப்பது போல நடித்தான் என்பது நதியாவிற்கு தெரியாது. போகப்போக நதியாவின் உண்மையான காதலில் அவன் அவளை உண்மையாகக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறான். அதுவும் நதியாவிற்கு தெரியாது. அவனை தீவிரமாக வீட்டில் பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொள்ளும் அவள், அவனது வீட்டில் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை எல்லாம் அவனுக்காக பொறுத்துக் கொள்கிறாள். ஆனால் அவன் அவளை காதலில் ஜெயிக்க சவால் விட்டு அவனது நண்பனின் ஜெயிப்பதற்காக காதலிப்பதை போல நடித்தான் என்பது தெரியவரும் போது அவனை விட்டுப் பிரிகிறாள். அவன் அவளை தேடி ஏற்காடுக்கு வந்து அவனிடம் காதலை புரிய வைத்து அவளை அழைத்துக் கொண்டு செல்வதுதான் நதி எங்கே போகிறது என்ற கதை.
Release date
Ebook: 11 January 2021
English
India