Step into an infinite world of stories
அகல் விளக்கின் சுடர் போல் அமைதியான பெண் அவள் எதிர் வீட்டில் குடியிருக்கும் இளைஞன் ஒருவனை காதலிக்கிறாள். அவளைப் பற்றி அவள் வீட்டில் மிக அமைதியான பெண் என்ற அபிப்ராயம் இருக்கிறது. அவனைப்பற்றியோ ரவுடி என்ற பிம்பம் இருக்கிறது.
அவன் நல்லவன் அநியாயத்தை தட்டி கேட்பவன். நமக்கு என்ன என்று ஒதுங்கிப் போகாமல் ரவுடி என்ற பிம்பம் வந்துவிடும் என்றும் கவலைப்படாமல் அவற்றிற்காக குரல் கொடுப்பதை அந்தப் பெண் விரும்புகிறாள்.
அவனது இயல்பு அவளை கவர்கிறது அவளது குடும்பம் அவளது காதலை எதிர்க்கிறது. அவன் பெண் கேட்டு வந்ததும் அவனை அவமானப்படுத்தி வெளியேற்றிவிடுகிறது. அவள் மௌனமாக வீட்டுக்குள் சத்யாகிரகம் செய்கிறாள். சரியாக உண்பதில்லை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். உயிருக்கு போரடுகிறாள். அவளது குடும்பம் அவளது காதலனை தேடி செல்கிறது. அவன் வந்ததும் அவள் உயிர் பிழைக்கிறாள். உண்மையான அவளது காதல் வெற்றி பெறுகிறது அவனுக்கும் அவளுக்கும் அவளது குடும்பம் திருமணம் செய்து வைக்கிறது.
Release date
Ebook: 11 January 2021
English
India