Step into an infinite world of stories
ஆனந்தராஜ், திருமுருகன், விஜயசந்தர் மூவரும் பல வியாபாரங்கள் செய்து நஷ்டமடைந்தவர்கள். கடைசி முயற்சியாய் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க முயற்சியெடுக்கின்றனர். அதை வித்தியாசமாக செய்யும் விதமாய் ரெஸ்டாரெண்டை ஒரு பேய் மாளிகை போல் டெக்கரேட் செய்து, உள்ளே செயற்கையாக பல அமானுஷ்ய காட்சிகளை அரங்கேற்றுகின்றனர்.
எலும்புக் கூட்டு உருவத்தில் சர்வர்கள், ரத்தக்காட்டேரி வேடத்தில் சமையல்காரர்கள், பாதி எரிந்த பிணம் போன்ற மேக்கப்பில் ஒருவன் செய்யும் சேட்டைகள், அவ்வப் போது அந்தரத்தில் மிதந்து செல்லும் ரத்தம் சொட்டும் மனிதக் கை, உணவைப் பரிமாறும் போதே கழன்று விழும் எலும்புக் கூட்டு சர்வர் தலை, என கிராபிக்ஸ் வேலைகளைப் போட்டு பிரபலமாகின்றனர்.
வியாபாரம் படு சூடாகி, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் நேரத்தில் அங்கு உண்மையான ”பெண் பேய்” ஒன்று ஊடுருவுகிறது.
திருமுருகனைக் காதலிக்கும் அந்தப் பெண் பேய் அவனுக்கு பல நன்மைகளைச் செய்கிறது.
இறுதியில் தன் பேய்க் காதலியை திருமுருகன் கைப்பிடிக்கிறான்.
எப்படி சாத்தியம்?
பேய்க்கும் மனிதனுக்கும் இடையிலான காதல் ஜெயிக்குமா?
நாவலைப் படியுங்க…
பயமில்லாமல்!
Release date
Ebook: 23 December 2021
English
India