Step into an infinite world of stories
Fiction
அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைப் பிரிவில் பணி புரிபவர் அருணகிரி. சவங்களை அறுத்து பிரேதப் பரிசோதனையை டாக்டர்கள் முடித்து விட்டுச் சென்றதும், அவர்கள் வெளியே எடுத்துப் போட்ட உடலின் பாகங்களை மீண்டும் உடலுக்குள் திணித்து தையல் போடும் பணி அருணகிரிக்கு. ஒவ்வொரு முறை அந்தப் பணியை செய்யும் போதும் கூறு போடப்பட்டுக் கிடக்கும் அந்த மனித ஜீவனுக்காக கண்ணீர் சிந்துவார் அருணகிரி.
உடன் பணிபுரியும் ஆறுமுகம் அருணகிரியின் அந்தச் செயலுக்காக அவரைக் கிண்டல் செய்வான்.
இளம் வயதிலேயே மனைவியை இழந்தவரான அருணகிரி மறுமணம் செய்து கொள்ளாமல், தன் மகன் பெருமாளுக்காக தனி மரமாகவே வாழ்ந்தார். தாயில்லாப் பிள்ளை என்ற காரணத்திற்காக அவன் மீது தன் உயிரையே வைத்திருந்தார் அவர். அதே நேரம், தன் மகன் பெருமாளை அதிக செல்லம் கொடுத்து வளர்க்க அவன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறான்.
ஒரு முறை, நகரில் சிறுமியொருத்தியைக் கற்பழித்த பெருமாளை காவல்துறை என்கௌண்டர் செய்து விட, அவனுடைய பிரேதப் பரிசோதனை முடிந்த பின் வழக்கம் போல் உள்ளே செல்கிறார் அருணகிரி…
அடுத்து நடந்தது என்ன?
அது நாவலுக்குள் உள்ள ரகசியம்….வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 11 January 2021
English
India