Step into an infinite world of stories
5
Religion & Spirituality
மகாபாரதம் என்பது ஒரு ஒப்பு உயர்வு அற்ற மாபெரும் காவியம். மகாபாரதத்தில் உள்ள கருத்துக்கள் எல்லா காலங்களிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையுடையது.
கிராமங்கள் நகரங்கள் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற மகாபாரத சொற்பொழிவுகளை மக்கள் கேட்டு மகிழ்கின்றனர். அதிலுள்ள கதைகளை நிகழ்வுகளை எப்போது கேட்டாலும் திகட்டாத தெள்ளமுதமாகிறது. எனவேதான் மகாபாரதம் என்ற நூல் இந்திய இதிகாசம் என புகழப்படுகிறது. அவ்வாறே இராம கதையாகிய இராமாயணமும் உள்ளது. அதுவும் இந்திய இதிகாசம் என போற்றப்படுகிறது.
பதினெட்டு புராணங்களை எழுதியவர் வியாசர். நான்கு வேதங்களை ரிக், யஜறர், சாம மற்றும் அதர்வண வேதம் என்று எல்லோரும் புரிந்து கொள்ளுமாறு தொகுத்துக் கொடுத்தவர் வியாசர். எனவேதான் அவருக்கு வேதவியாசர் என்று பெயர் ஏற்பட்டது.
இந்த மாபெரும் பாரத காவியத்தை வியாசர் சொல்ல, எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் எழுதினார்.
நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாததவ வாய் மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வடமேரு வெற்பாக அங்கூர் எழுத்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாமரோ.
Release date
Ebook: 18 December 2019
Tags
English
India