Step into an infinite world of stories
ஒரே ஒரு கொலை! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது. சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்றுவரை விலகாத, சரித்திரப் பிரியர்களின் மனத்தைவிட்டு நீங்காத, மர்ம முடிச்சாக இருப்பது மாமன்னன் ராஜ ராஜசோழன் மற்றும் ஆழ்வார் குந்தவைப்பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான்.
தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்தக் கொலையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.
அனைவருமே ஆதித்த கரிகாலனின் மர்மக் கொலையைப் பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, அவனது பிறப்பில் தொடங்கி, இறப்புவரை நிலவிய மர்மங்களைப் பற்றியோ, அவனை மணம் முடிக்கப் பெண்கள் பயந்தனர் என்பது பற்றியோ ஏன் இதுவரை யாருமே ஆய்வு செய்யவில்லை?
கெடில நதியைக் கடந்து தெற்கே செல்ல ஆதித்த கரிகாலனுக்கு அவனுடைய பாட்டனார் மலையமான் தடை விதித்திருந்தார். எதனால்? சோழ இளவரசன் ஏன் தஞ்சை செல்லத் தயங்கினான்? அவனது பிறப்பின்போதே அவனை விரட்டத் தொடங்கிய மரணம், 29 வயதில் அவனைக் கைப்பற்றியது. அவனது வாழ்வில் நிகழ்ந்த மர்மங்களை விளக்கும் கதைதான் இந்தக் கூடலழகி.
Release date
Ebook: 5 March 2024
English
India