Step into an infinite world of stories
வீடுகளுக்கு புது நம்பர் கொடுக்கப்பட்டதால் ஏற்படும் குழப்பத்தில், எமகிங்கரர்கள் தவறுதலாக மார்கண்டேயன் என்பவனை எமலோகம் அழைத்து வருகின்றனர். மார்கண்டேயனுக்கும் சிவபெருமானின் நெற்றிக் கண்ணுக்கும் பயந்து எமன் அவனை பூலோகம் அனுப்பி வைக்கப்படாத பாடுபடுகிறான்.
மார்கண்டேயனைப் போலவே உள்ள கண்ணப்பன் ஒரு விபத்தில் இறக்க இருப்பதால் கண்ணப்பனுக்கு பதில் அவன் வீட்டில் மார்க்கண்டேயனை விட்டுவிடத்தீர்மானிக்கின்றனர். ஆனால் கண்ணப்பன் விபத்திலிருந்து தப்பி வீடு திரும்புகிறான். ஒரே வீட்டில் இரு கணவன்மார்கள் இருக்கக்கூடாது என்பதால் மார்கண்டேயனை அழைத்து வரச்செல்லும் கிங்கரர்கள் மறுபடியும் தவறுதலாக கண்ணப்பனை மேலோகம் அழைத்து வருகின்றனர்.
இம்முறை மார்கண்டேயனின் உயிரை எடுக்க எமனே பூலோகம் வருகிறான். அதற்குள் மார்கண்டேயன் சாவித்திரி திருமணம் நடந்து விடுகிறது. சாவித்திரிக்கு வாக்கு கொடுத்த எமன் மார்கண்டேயனின் உயிரை எடுக்க முடியாமல் ஏமாந்து போகிறான். தம்பதிகள் சேருகின்றனர்.
Release date
Audiobook: 2 February 2022
English
India