Step into an infinite world of stories
செல்வத்தின் கார் முகப்பில் உள்ள சிறுபொம்மையை ஒருத்தர் வருடும் சின்னச் செயலாகட்டும், தும்பிகள் பறப்பதாகட்டும், க்ஷவரக்கத்தியால் ஒருத்தர் கழுத்தறுபட்டுக் கொலை ஆவதாகட்டும், காதல் உள்ளங்களின் மென்மையும் போராட்டமும் செயல்படும் விதமாகட்டும் - நட்புக்கும் காதலுக்கும் எத்தனை வகை சோதனைகள். கனிவுகளும், வீரங்களும் விதவிதமான பரீட்சைகள் எழுதித் தேற வேண்டியிருக்கின்றன.
ஒருத்தரின் காதலியை இன்னொருத்தர் காதலிப்பது பண்பாடல்ல. ஆனால் வசந்தனின் பாதையை நானும் காதலித்தேன். ராதையின் தங்கை அந்த இரட்டைச் சடை யசோதா மட்டும் துடுக்கும், வாயாடித்தனமுமாக இல்லாதிருந்தால் அந்தச் சுட்டியிடமும் விண்ணப்பித்திருப்பேன் - வெங்கு மாமாவின் துணையோடு.
நாவலின் நடை அழகு - ஊறுகாய்க்கு ஊற்றிய வினிகர். வருடங்கள் பல ஆனாலும் சலிப்பு இல்லாமல் வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அத்தியாயம், அத்தியாயமாகக் காத்திருந்து படித்த நாற்பத்தைந்து அத்தியாயங்களை ஒரே மூச்சில் ஒரே இரவில் மீண்டும் படித்து அதே இன்பத்தை அடைந்து தெவிட்டவில்லையே என்று ஆச்சரியப்பட்டிருப்பேனா?
ஓரொரு அத்தியாயமும் அச்சு யந்திரத்தில் ஓடத் தொடங்கிய பிறகும் கூட, நடுநிசியில் ஆசிரியரின் பங்களாக் கதவைத் தட்டும் மிஷின் புரூஃபில் அவர் புகுந்து விளையாடாதிருக்க வேண்டுமே என்று கம்பாசிட்டர்களும் மிஷின் மென்னும், உதவி ஆசிரியர்களும் ஒரு குட்டிப் பிரார்த்தனை நடத்துவோம்.
கைக் கம்போஸிங் காலம் அது. கம்பாசிட்டர்களின் மேலும், தன் மேலும் ஈவு இரக்கமில்லாமல், விடிய விடிய எழுதி, விடிய விடியக் கம்போஸ் செய்த காலிகளை, பக்கங்களை ஆசிரியர் மீண்டும், எழுதியும், அடித்தும் திருத்தியும் - ரொம்பத்தான் படுத்தி எடுத்திருக்கிறார்.
நாவலைப் படிக்கும்போது உங்களுக்கும் தெரிய வரும்.
Release date
Ebook: 10 December 2020
English
India