Step into an infinite world of stories
சில ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் நடந்த ஒரு சம்பவம் செய்தியாக ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.
அதில் ஒரு நாடகம் ஒளிந்து கொண்டிருப்பதை என்னால் உடனடியாக உணர முடிந்தது.
குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் கணிப்பார்கள், இந்த கதையின் நாயகன் ஜாதகம் கணித்து குழந்தை பெற்றுக் கொள்கிறான்!!
ஜாதகத்தை தனக்கு சாதகமாக மாற்றுகிறான்!
ஏன்? எதற்கு? அவனது செயல் சரிதானா? வெற்றியா? தோல்வியா?
என்பதை நானும் அவனைப் பின் தொடர்ந்து நாடகம் ஆக்கினேன்.
இந்த நாடகம் சென்னை வானொலி நிலையத்தாரால் தேசிய சேவையில் ஒலிபரப்பப்பட்டது.
அதற்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலி பரப்பானதாக எனக்கு தெரிவித்து ஹிந்தி வடிவத்தை அனுப்பியிருந்தார்கள்.
இப்போது இந்த நாடகம் ஒரு மின் புத்தகமாக pustaka வில் வெளிவருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
Release date
Ebook: 12 August 2021
English
India