Step into an infinite world of stories
தன் வீட்டு வேலைக்காரியான சாய்ராபானு வேறு மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளை வேலையிலிருந்து துரத்தி விடும்படி மனைவியிடம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார் நாராயணசாமி. “நம்ம வீடு இருப்பது புறநகர்ப் பகுதி…இந்த ஏரியாவுக்கு வர எந்த வேலைக்காரியும் சம்மதிப்பதில்லை…அதனால இவளைத் துரத்த முடியாது” என்று தீர்மானமாய் மனைவி சொல்லிவிட, அந்த வேலைக்காரி மீதும் அவளுடன் வரும் அவள் மகள் சிறுமி ஷெரீன் மீது அளவு கடந்த கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவார் நாராயணசாமி. தங்கள் மகள் குழந்தை காயத்ரி அந்த வேலைக்காரி மகளோடு விளையாடுவதையே தடை செய்தவர் அவர். ஒரு முறை காயத்ரி காணாமல் போகிறார். இரவு வரை அவள் வராமல் போக பதட்டமாகிறார். சற்றுத் தொலைவிலுள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றிற்குள் அவள் விழுந்து விட்ட தகவல் கிடைத்ததும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பேரிடர் மீட்புக்குழு ஆட்களையும், ராட்சத எந்திரங்களையும் வரவழைத்து, இரவு முழுவதும் படாதபாடு பட்டு குழந்தையை அதிகாலை வேளையில் வெளிக் கொணர,
அக்குழந்தை வேலைக்காரியின் மகள் ஷெரீன்.
அப்படியென்றால்…..காயத்ரி எங்கே?
கதையை முழுவதும் படியுங்கள்.
Release date
Ebook: 11 January 2021
English
India