Step into an infinite world of stories
வரன்+தட்சணை என்பதே வரதட்சணை. பண்டைய காலத்தில் போரின் காரணமாக நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்த போது நல்ல மணமகன் தங்கள் பெண்ணுக்கு அமைய வேண்டும் என்றெண்ணிய பெற்றோர் மணமகன் வீட்டாருக்கு தட்சணை கொடுத்து சம்பந்தம் ஏற்படுத்திக்கொண்டனர். ஓர் உயரிய நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட வழக்கம், பேராசை பிடித்த சிலரால் அதன் முழு அர்த்தமும் மடிந்து போய்விட்டது. ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டில் மகாலட்சுமியாக கருதப்படுகிறார். எனவே மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு சிரமப்படுத்தி இல்லத்திற்கு அழைத்து வருதல் கூடாது, வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது மணமகளுக்கு வெறுப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. அத்துடன் பெண்ணை பெற்றவர்களும் அவரவர் தகுதிக்கு மீறி கடன் வாங்கி தம் மகள் வசதியான வீட்டிற்கு சென்றால் நன்றாக வாழ்வாள் என வரதட்சணை கொடுப்பதும் வரதட்சனையின் எல்லையை விரிவடையச் செய்கிறது.
நாவல் இளவரசி பரிமளா இராஜேந்திரன் எழுதியுள்ள “ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்ற நாவல் இவ்விதழை அலங்கரிக்கிறது. பிள்ளைகளை காயப்படுத்தாத தந்தை, மாமியாருக்கு பணத்தின் அருமையை புரியவைத்த மருமகள், கைபிடித்தவளை விட்டு கொடுக்காத கணவன் என பல கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக வாழ்ந்துள்ள அருமையான படைப்பை நமக்கு வழங்கியுள்ளார் நாவலாசிரியர்.
Release date
Ebook: 30 September 2020
English
India