Step into an infinite world of stories
உறவுகளின் சங்கமம் தான் வாழ்க்கை. தெளிவான நீரோடையாக செல்லும் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும் போது துவண்டு போய்விடுகிறோம். பெற்றமகள் திருமணம் முடிந்தபின் இறந்து போவது எவ்வளவு பெரிய துயரம். வீட்டிற்கு வந்த மருமகனே, மகனாக மாறி, அக்குடும்பத்திற்காக தன் கவலையை மறந்து, மகனாக இருந்து அவர்களை திருப்திபடுத்த முயற்சிக்கிறான்.
அவனின் முயற்சி நிறைவேறியதா... அந்த குடும்பம் துக்கத்தில் இருந்து வெளிவந்ததா...
மருமகனின் எதிர்காலம் என்னாயிற்று…
அவருக்கு பிறந்த குழந்தைகள்... எப்படி வளர்ந்தது... அன்பையும், பாசத்தையும் உறவுகளுக்காக தன்னலம் பாராமல் வழங்கும்போது உறவுக்கென்று பிறந்த அந்த உள்ளம் போற்றப்படுகிறதா...
இப்படி குடும்ப உறவுகளின் அன்பையும், ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் இந்நாவலில் காதலில் கலந்து, கற்பனை வளத்துடன் எழுதியுள்ளேன்.
வாசகர்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன்...
- பரிமளா ராஜேந்திரன்
Release date
Ebook: 10 December 2020
English
India