Step into an infinite world of stories
Romance
இந்திய வாழ்க்கை முறையில் புருஷார்த்தங்கள் நான்கு. அவையாவன: அறம் பொருள் இன்பம் வீடு.
இதில் அறத்தை மேற்கொண்டு அதன் வழியே பொருளை ஈட்டி இன்பம் துய்க்காத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
காதலைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. காதலை மையமாக வைத்து எழுகின்ற கதைகளும் உண்மைச் சம்பவங்களும் கோடானு கோடி!
காதலுக்காக மணிமுடியையே துறந்தார் எட்டாம் எட்வர்டு. எமனிடமிருந்தே சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி! காதல் கவிதைகள் இல்லாத மொழிகளே உலகில் இல்லை. சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக் கணக்கில் காதல் கவிதைகள் உள்ளன. சிருங்கார ரஸத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த பூமி பாரத பூமி.
தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில இலக்கியங்கள் சுட்டிக் காட்டும் சில கவிதைகள் பற்றி அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
Release date
Ebook: 27 June 2022
English
India