Step into an infinite world of stories
Fantasy & SciFi
“என்னடீ பேசற? உன் சம்பளத்துக்கு பட்ஜெட் போட இவ யாரு?” “அப்படி சொல்லாதேம்மா! நீயும் தப்பா பேசற! இத்தனை நாள் சண்டை போட்டாலும், நான் பட்டதாரி ஆகறதை அண்ணி தடுக்கலை! அதுக்காக நன்றி சொல்லணும். அவசரப்படாதே! விட்டுப்பிடி!” மறுநாள் காலை எழுந்ததும்- “ரேவதி! இங்கே வா!” “என்னண்ணி?” “ஆபீஸ் போக நல்ல ட்ரஸ் வேணும். இன்னிக்கு சாயங்காலம் உன்னைக் கூட்டிட்டுப் போய் வாங்கித் தர்றேன்.” குரலில் கனிவு! அம்மா, வசந்த் இருவருக்கும் ஆச்சர்யம். சொன்னபடியே மாலை ரேவதியை அழைத்துப் போய், உடைகள், செருப்பு, ஹேண்ட் பேக், மேக்கப் சாதனங்கள் என எட்டாயிரம் ரூபாய்க்கு கார்ட் போட்டு வாங்கினாள். ரேவதி மிரண்டு போனாள். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் காட்டி சந்தோஷப்பட்டாள். “உங்கிட்ட பணம் இருக்குடி! இனிமே உன்னைத் தாங்குவா! புரியுதா?” “சரிம்மா! தப்பான கண்ணோட்டத்துலயே பாக்காதே! பாசத்தை நீ குடுத்தாத்தானே உனக்கும் அது கிடைக்கும்? நாம மாற வேண்டாம். அனுசரிச்சே போவோம்.” ஒருமாத காலம் ஓடி விட்டது. பவித்ரா, ரேவதியிடம் மட்டும் பழைய கடுகடுப்பு இல்லாமல் பாசத்துடன் இருந்தாள். அம்மாவிடம் அதே சிடுசிடுப்புதான். முதல் சம்பளம் வாங்கிக் கொண்டு ரேவதி வந்தாள். பூஜை அறையில் வைத்துக் கும்பிட்டு, அம்மாவிடம் தந்தாள்பேரென்ன?” “சாய்ராம்!” “ஆஹா! நமக்குப் புடிச்ச பேரு. இப்ப வெளிநாட்ல தான் இருக்காரா?” “நேத்துதான் இந்தியா வந்தார். வேலை விஷயமாத்தான். ரெண்டு மாசம் இருப்பாராம். கல்யாணத்தை செஞ்சிடலாம்னு பெத்தவங்க விரும்பறாங்க!” “சரி! நம்ம பொண்ணு ஜாதகத்தைக் குடுத்துடுங்க!” “குடுத்தாச்சு. சாயங்காலமே பதில் வரும்.” “நான் நேர்ல வந்து பேசணுமா?” “கேட்டுச் சொல்றேன்!” “முடிங்க! எம்பொண்ணு தேவதையாச்சே. வீடு தேடி பெரிய சம்பந்தம் வரும்னு ஜோசியர் சொன்னது பொய்யாகுமா?” தரகர் புறப்பட்டு விட்டார். “என்னங்க! படிப்பு முடியவே இவளுக்கு ஆறு மாசமாகும். ரெண்டு மாசத்துல எப்படீங்க கல்யாணம்? சுவாதி இதுக்கு ஒப்புக்கமாட்டா!” “நீ அவசரப்படாதே! நான் குழந்தைகிட்ட பேசிக்கறேன். நல்ல வாழ்க்கை வரும் போது எதுவும் தடையா இருக்கக் கூடாது. யோகம் வந்துட்டா, நடந்தே தீரும்!” அம்மா பெருமூச்சு விட்டாள்!
© 2024 Pocket Books (Ebook): 6610000511037
Release date
Ebook: 16 January 2024
English
India