Step into an infinite world of stories
4.7
Biographies
இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு கால் உணர்வு உச்சத்திலும் நிலைகொண்டு அலைபாய்வது. இந்த நாவல், துறவிகளின வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாசாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்கவாவது முடியும். அது பாராவுக்குக் கை கூடியிருக்கிறது. பொதுவாகவே இந்தியக் கலாசாரத்தின் பின்னணியில் விரியும் எழுத்துகள் படிக்கக் கடினமானதாகவும், தத்துவப் பின்னணியில் புரியாத மொழியில் எழுதப்பட்டவையாகவும் இருக்கும். ஆனால் பாராவின் எளிமையான எழுத்து இச்சிக்கல்களைப் புறம் தள்ளி, வாசகனைத் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நாம் அறியாத மரபானதொரு பேருலகினை, தகிப்பும் உக்கிரமும் ததும்பும் நவீன மொழியில் பதிவு செய்திருக்கும் யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் அசுர சாதனை.
© 2024 Storyside IN (Audiobook): 9789355442727
Release date
Audiobook: 10 January 2024
English
India