Step into an infinite world of stories
திருச்செந்தூரை முக்கியக் களமாகக் கொண்டது. சாமியார் ஒருவர் வருகிறார். அவர்தாம் கதையைப் பின்னணியிலிருந்து நடத்துகிறாரோ என்று ஐயம் ஏற்படும் அளவு நடக்கவுள்ள சம்பவத்தை சாடை காட்டுகிறார்.
நாவலில் வரும் எழுத்தாளர் சுந்தரம் டாக்டர் மு.வரதராசனின் கதைமாந்தர் போன்ற லட்சிய மனிதர். காதலில் தோற்று, பிறகு வென்று, கடைசியில் அவரது காதல் கேள்விகுறியாக மாறியபோதிலும் இந்த மனிதர் பண்புகளிலிருந்து நழுவாதவர்.
பணத்தை வட்டிக்கு விடும் தந்தையை எதிர்த்து காதலிவுடன் கை கோர்க்கிறார் காதலன். இதற்கு உதவுகிறார் எழுத்தாளர் ஆனால் விதியின் விளையாட்டால் அவர்கள் ஒன்று சேர்வதில் தடை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை கூறுகிறார் பக்தர், அவர் கூறிய காரணம் என்ன? அந்த பெண்ணின் எதிர்காலம் என்ன ஆனது! என்பதை அறிந்து கொள்ள படியுங்கள்...
Release date
Ebook: 28 March 2022
English
India