Step into an infinite world of stories
உயிர் மீது ஒரு தாகம் - ஒரு குற்றவியல் கதை என்றாலும் இது வேறொரு கோணத்தில் இருந்து எழுதப்பட்டது.
ஆண்டவன் மனித உயிர்களைப் படைத்தான், அந்த உயிர்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் பொறுப்பையும் அந்த மனித உயிர்களில் சில பேர்க்குக் கொடுத்தான். அந்த சிலபேரைத்தான் நாம் டாக்டர்கள் என்று சொல்கிறோம். அந்த டாக்டர்கள் மனிதனுக்கு வரும் நோய் நொடிகளைக் கண்டுபிடித்து அதற்கென சிகிச்சை முறைகளைக் கொடுத்து உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள். இதன் காரணமாகவே நாம் டாக்டர்களை இ'ரண்டாவது கடவுள்' என்று சொல்கிறோம். ஆனால் 'உயிர் மீது தாகம்' என்ற இந்த நாவலில் வரும் டாக்டர் எப்படிப்பட்டவர் என்பதை வாசகர்கள் அறிய நேரிடும்போது அதிர்ந்து போவது உறுதி!
அந்த டாக்டர் அப்படி என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? எதற்காக செய்கிறார்? என்கிற இந்த மூன்று கேள்விகளுக்கும் விடைகள் தெரிய நாவலின் பதினோரு அத்தியாயங்களை பார்வையால் படம் பிடிக்க வேண்டும். இது ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட கதை. இது ஓரளவுக்கு உண்மைக் கதையும் கூட மனோதத்துவ டாக்டர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது சொன்ன ஒரு சம்பவம்தான் நாவலாக உருவெடுத்துள்ளது.
- ராஜேஷ்குமார்.
Release date
Ebook: 6 April 2022
English
India