Step into an infinite world of stories
Religion & Spirituality
ஹிந்து மதத்தின் ஆணி வேராக அமையும் வேதங்கள், இதிஹாஸங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றில் உள்ள மர்மங்களை விளக்கும் அற்புத நூல் யோக வாசிஷ்டம்!
விதியா, மதியா என்ற கேள்விக்கு இந்த நூல் தரும் விடை நம்மை வாழ்வியலில் முன்னேற வைக்கும். உலகின் ஆகப் பெரும் நூற்றுக் கணக்கான அறிஞர்கள் இன்று அறிவியல் பூர்வமாகக் கூறுவதை அன்றே கூறி இருக்கும் உலகின் ஒப்பற்ற ஒரு நூல் யோக வாசிஷ்டம்.
வாழ்க்கையில் நாம் அறிய வேண்டிய அனைத்தின் சாரமும் இதில் உள்ளது; அத்துடன் இன்றைய நவீன அறிவியல் கூறும் உளம் சார்ந்த உண்மைகளும், அதீத உளவியல் பற்றிய வியத்தகு செய்திகளும் அன்றே இந்த நூலில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும். இதைப் பற்றிய அதிசய விவரங்களையும் முக்கிய கதைகளையும் இந்த நூல் 24 அத்தியாயங்களில் தருகிறது. யோகவாசிஷ்டத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே!
Release date
Ebook: 19 December 2022
English
India