Step into an infinite world of stories
3
Religion & Spirituality
சமீப காலத்தில் நம்மிடையே வாழ்ந்த பல ஞானிகளைப் பற்றி கேட்டும் படித்தும் வருகிறோம். ராமலிங்க வள்ளலார், சேஷாத்திரி ஸ்வாமிகள் சதாசிவ பிரம்மேந்திரர் ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர் என்பரை எல்லாம் நாம் அறிவோம்.
இவர்களுக்கு என்று சொந்தமானது என்று எதுவும் கிடையாது. ஆனாலும் இவர்களைத் தேடி நமது நாட்டின் பிரபல அதிகாரிகள் மந்திரிகள் மட்டுமில்லாமல் உலகத் தலைவர்கள் பலரும் வருகிறார்கள். இன்றும் என்றும் திருவாண்ணாமலையில் உள்ள ரமணரின் ஆசிரமத்தில் உலகில் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்தவாறு இருக்கிறார்கள்.
வாழும் காலத்தில் காஞ்சி முனிவர் என்றும் மஹா சுவாமிகள், மஹா பெரியவா என்றெல்லாம் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பட்ட காஞ்சி மடாதிபதியைக் காண ஏழைகள் முதல் அதிகாரிகள் தலைவர்கள் வந்தவாறு இருப்பார்கள்.
நம்மைப் போலவே சாதாரண குடும்பத்தில் சராசரி மனிதராக பிறந்து வளர்ந்து , திடீரென்று ஒரு நாள் குடும்பத்திலிருந்து பிரிந்து உடமை அனைத்தையும் துறந்து, மஹான் என்று பெயர் பெறுவது எப்படி?
இவர்கள் வாழ்க்கையின் சில முக்கிய திருப்பங்களை சற்று அலசுவோமா?
Release date
Ebook: 18 May 2020
English
India