Step into an infinite world of stories
“டேய்.. ரேகா..டா..” என்று கத்திய வினோத்தை அதிர்ந்து பார்த்தான் மாதவ்.
“என்னடா உளர்றே? ஆவி அவதாரம் எடுத்து வந்திருக்காளா? எங்கே? அவளுக்கும் சேர்த்து ஒரு கப் டீ ஆர்டர் பண்ணவா?”
“முட்டாள் மாதிரிப் பேசாதே. சீக்கிரம் இங்கே வா. இந்த ஸ்க்ரீனைப் பாரு.”
வினோத் சுட்டிக்காட்டிய திரையில் அந்தப் பெண்ணைப் பார்த்தான் மாதவ்.
கம்பெனி ரிசப்ஷனில் பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனால், இவள் ரேகாவாக இருக்க வாய்ப்பில்லையே! சுடுகாட்டுச் சாம்பலுக்கு மீண்டும் உயிர் வருமா? “இது எப்படி ரேகாவா இருக்கமுடியும்? ரேகா மாதிரி அதே ஹைட் அண்ட் வெயிட்ல இருக்கற யாரைப் பார்த்தாலும் உனக்கு அப்படித் தோணுது.”
“இல்லடா... அந்தப் பெண்ணோட முகத்தை ஜூம் பண்ணிப் பாரு. நைன்டிநைன் பர்சன்ட் ரேகா மாதிரித்தான் இருக்கா.”
“ரொம்ப முத்திடுச்சுன்னு நினைக்கறேன். எதுக்கும் ஒரு...”
“அவ யாருன்னு ரிசப்ஷனுக்கே கேட்டுடலாம்.” இன்டர்காமை எடுத்தான் வினோத். பாய்ந்து வந்து தடுத்தான் மாதவ்.
“எ..ன்..னடா செய்யறே? நீ இந்தக் கம்பெனியோட முதலாளி. நீ போய் ஒரு பொண்ணைப் பற்றி விசாரிச்சிட்டு இருப்பியா? உனக்கு அவ யாருன்னு தெரியணும்..அவ்வளவுதானே! நானே கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இரு.”
மாதவ் வெளியே செல்ல, மீண்டும் திரையை உற்றுப் பார்த்தான் வினோத். மான்யா அந்தத் திரையில் இருந்து காணாமல் போயிருந்தாள்.
Release date
Ebook: 16 August 2021
English
India