Step into an infinite world of stories
Religion & Spirituality
ரிக்வேதம் பற்றிய எனது இரண்டாவது நூல் இது. முதல் நூல் 'ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்' என்ற தலைப்பில் முப்பது ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் வெளியிடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளாக ஐரோப்பியர்களின் பூதக் கண்ணாடிகளால் பார்க்கப்பட்டது இந்த ரிக்வேத நூல். எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இதுதான் இப்போது புழக்கத்திலுள்ள நூல்களில் பழமையானது என்பதாகும். இதிலுள்ள புருஷ சூக்த மந்திரம், கல்யாண மந்திரங்கள், இறுதிச் சடங்கு மந்திரங்களை இப்போதும் பயன்படுத்துகின்றனர். பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்திலும் சில ரிக்வேத மந்திரங்கள் இருக்கின்றன.
இதிலுள்ள உரையாடல் கவிதைகள், அந்தக் காலத்தில் நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பட்டன என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. மேல்நாட்டினரைத் திகைக்கவைத்த பல மந்திரங்களுக்கு நானும் வியாக்கியானம் செய்துள்ளேன். எனது முடிவுகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
Release date
Ebook: 19 December 2022
English
India