Step into an infinite world of stories
4.8
Religion & Spirituality
an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by Sathiyapriyan, ebook and book published by Swasam Publications
ரமண மஹரிஷி 16 வயதில் மெய்ஞானம் அடைந்தவர். இந்திய அத்வைத தத்துவ மரபின் உச்சம். புராணங்களில் படிக்கக் கிடைத்த மஹரிஷி என்ற வார்த்தைக்கு நம் கண் முன்னே வாழ்ந்த உதாரணம். திருவண்ணாமலையிலிருந்து ஓரடி கூட நகராமல், உலகெங்கிலும் இருந்து பலரையும் தன்னிடம் வரவைத்த பேராற்றல். இறைநிலையை அடைந்தபின், மலைகளுக்குள் ஓடி ஒளியாமல், தன் இறுதிநாள் வரை அனைவருக்கும் தரிசனமளித்து, தன்னுள் ஒளிர்ந்த பேரமைதியை அனைவருக்கும் தந்த பெருங்கருணை. அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல் பாவித்து, பசுவுக்கும் முக்தியளித்த, தூய அத்வைதப் பேரொளி. வேத, உபநிடத வாக்கியங்களுக்கு உயிர் கொடுத்தது போல் எழுந்து வந்த இந்திய மரபின் முதிர்கனி. பகவான் ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்நூல். சத்தியப்பிரியன் மஹரிஷிகளின் வாழ்க்கையை மதுரமொழியில் எழுதுபவர். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறான ‘பொற்கை சுவாமிகள்’ நூலைத் தொடர்ந்து இவரது ‘ரமண புராணம்’ நூல் வெளியாகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி B.R. சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
© 2025 itsdiff Entertainment (Audiobook): 9798347939985
Release date
Audiobook: 3 January 2025
English
India