Step into an infinite world of stories
Fiction
மண் மீது மழை தூறல் படும்போது வீசும் சுகந்த மணம்போல... இந்த நாவலின் பாத்திரங்கள், மணம் வீசுபவை. எந்த ஒரு மனிதனும் வெற்றிக்கு உரியவனே! தன் லட்சியத்திற்காக அடுக்கடுக்கான சோதனைகளை எதிர்கொள்ளும் இளைஞன் செவத்தான். அவனது கொள்கை போரில் பங்கு எடுத்துக் கொள்ளும் செம்பாவுக்கு அவன் மீது காதல் மலர்கிறது. துன்பங்கள் வந்தாலும் தொடர்ந்து வைத்தியம் செய்பவர் சின்னப்பன். ஒரே ஒரு தவறு செய்ததால்; செய்யாத தவறுக்கு சிறை தண்டனை தனக்குத்தானே ஏற்றுக் கொண்டவர் மேகமுத்து! சுத்தமான பாலை போன்றவள் முத்தம்மா. பூவான அவளுக்குள் உயிர் வாசம் செய்தபடி ரகசியப்பட்டு கிடக்கிறது ஒரு உறவு.
இந்த பாத்திரங்களின் கோர்வையில் நிஜம் அவிழும் போது முத்தம்மா என்ற அந்த பூவுக்குள் இவ்வளவு காலமும் வாசம் செய்தது இவள்தானா? என்ற நிஜம் அதிர்ச்சியை உண்டாக்கும். கதையின் துவக்கத்திலிருந்து மாடுகளும் பாத்திரங்களாகி; கதாபாத்திரங்களோடு இணைந்து கதையின் கடைசியில் உச்சபட்சமான ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. மாடுகளுக்கும் ஆத்மார்த்தமான உணர்வுகள் பொங்கிப் பிரவகித்து பாசத்தை நுகர்கிற நறுமணம் வாசிப்போரும் நுகரத்தக்கது. செவத்தானும், செம்பாவும் சமுதாய வளர்ச்சிக்கான கொள்கையில் வெற்றி பெற்று நிமிர்ந்து நிற்பது எப்படி? என்பதுதான் பூவுக்குள் உயிர் வாசம் நாவல். வாசகர்களும் அந்த சுகந்தத்தை நுகருங்களேன்!
Release date
Ebook: 3 March 2023
English
India