Step into an infinite world of stories
நான் உங்களுக்குப் புதிதல்ல. கலைமகள் காட்டிய கதவு வழியாக வந்து நானே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுடைய ஆதரவை ஏற்கெனவே பெற்றிருக்கிறேன்.
சிறுகதை எழுதிக் கொண்டிருந்த நேரம். நாவல் எழுத ஆசை கொண்டு துணிந்து நான் என் கரத்தில் பேனாவை எடுத்தேன். இலக்கிய உலகில் ஏற்கெனவே நீந்திடும் எண்ணற்ற சுறா மீன்கள், திமிங்கலங்களுடன் ஒரு சிறு மீனாக நானும் நீந்திக் களிக்க ஆசை கொண்டேன்.
பெருந்தன்மை கொண்ட வாசகர்களாகிய உங்களது ஆதரவு அமோகமாக எனக்குக் கிடைத்தது; ஆமாம் இலக்கிய உலகின் கதவு திறக்கப்பட்டு, நானும் உள்ளே பிரவேசம் செய்துவிட்டேன்.
புது உலகில் அதிசய சந்திப்புகள், மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகள். எல்லாவற்றிலும் என்னையே மறந்து விட்டிருந்தேன். இரு கரம் நீட்டி வரவேற்ற என் அன்பு வாசகர்கள் என்னை மேலும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே முன்னேறினேன்.
படிகளைக் கண்டேன், ஒவ்வொரு படியாக ஏற ஆரம்பித்து விட்டேன். நீங்களும் உடன் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் - பெருமிதத்துடன் ஏறுகிறேன். இறுதிப் படியில் உங்களது மேலான தீர்ப்பும், ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கலைமகள் கதவைத் திறந்து தமிழுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். கலைமகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான நான் அவளுடைய அருட்கடாட்சத்தினால் உங்களுக்கு மேலும் மேலும் நல்ல நாவல்களைப் படைத்து மகிழ்விப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆதரவு தாருங்கள்.
Release date
Ebook: 27 June 2022
English
India