Step into an infinite world of stories
4.7
5 of 8
Short stories
நெருப்பு என்று சொன்னால் வாய் வேக வேண்டும்' என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சொன்னவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் சூழ்ச்சி. அது வாசகனை சிலந்தி வலையினைப்போல் கவ்விப் பிடிக்கிறது. பிறகு வேறொன்றாக உருமாற்றுகிறது. அவரது கதைகளுக்குள் செயல்படும் காலம் என்பது சமூகத்தினாலோ, வரலாற்றினாலோ உருவாக்கப்படுவதில்லை. அது மனித மனதின் அமரத்துவம் வாய்ந்த கடக்க முடியாத தரிசனங்களாலும் தவிப்புகளாலும் பின்னப்படுகிறது. நவீன தமிழ் புனைக்கதை மொழியின் மகத்தான வெளிப்பாடாக இவரது படைப்புகள் திகழ்கின்றன.
Release date
Audiobook: 6 March 2022
English
India