Step into an infinite world of stories
4.2
Short stories
நான் பிறந்த நாள் முதலாக, எனது செவிகளுக்கு மிகவும் பழக்கமாகிப் போன ஒரு ஒலி, காகிதங்களின் சலசலப்பு சத்தம்தான். நான் பிறந்தபோது, எனது தாய் கமலா சடகோபன், ஒரு வளர்ந்து வந்த எழுத்தாளர். தந்தை சித்ராலயா கோபுவோ திரைப்படத்துறையில் வேகமாக கதை வசனகர்த்தாவாக உயர்ந்து வந்தார். அம்மா எழுதிய முதல் கதை, சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கதையை எழுதி வெளியிடுவதற்குள், எனது தாய் பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருந்தது. ஆச்சாரமான, கண்டிப்பான குடும்பம். பதினாறு வயது பெண் பிள்ளைகளுக்குச் சட்ட திட்டங்கள் அதிகம். அடுக்களையில் தங்கள் மேற்பார்வையில்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று குடும்பப் பெரியவர்களின் கட்டளை. இதன் நடுவே, எப்படியோ குளிக்கும் அறையில், கொல்லைப்புற துணி துவைக்கும் கல்லில் என்று அமர்ந்து, ரகசியமாகவே தனது முதல் சிறுகதையை எழுதி முடித்தார். கதையின் பெயர் “ஒரு நடிகையின் நெஞ்சம்”. அதனை பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுமென்றால் வெள்ளைத்தாளில் அல்லவா எழுதி அனுப்ப வேண்டும்? அதனை வாங்குவதற்கு கூட காசு கொடுக்க மாட்டார்களே!. என்ன என்று சொல்லிக் காசு கேட்பது? கதை எழுதி அனுப்பப்போகிறேன் என்றால், அடுத்த நிமிடமே, பொறுப்பைக் கழிக்க வேண்டும் என்று, கையில் ஜாதகத்தை எடுத்து விடுவார்கள், வேறு வழி இல்லாமல், பழைய காலெண்டர் ஒன்றை எடுத்து, அதன் பின்பாக தான் எழுதிய சிறுகதையை காபி செய்து, அதனை சுருட்டி ஒரு பேப்பரில் சுற்றி, ஸ்டாம்ப் கூட ஒட்டாமல், சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பினார். பிறகு அதை பற்றி முற்றிலும் மறந்தே போனார். எனது அம்மா. ஆனால் தான் கதையை எழுதி அனுப்பிய அந்த காலெண்டர் சரஸ்வதி தேவியின் காலெண்டர் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் திடீரென்று சுதேசமித்திரன் பத்திரிகை பிரதி ஒன்று வீட்டிற்கு தபாலில் வர, எனது பாட்டனாரின் குடும்பம், யாருக்கு வந்தது என்று பார்க்க, டி. கமலா என்ற எனது தாயின் பெயரை பார்த்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி.
இனி கதையுடன் பயணிப்போம் வாருங்கள்
Release date
Ebook: 14 July 2021
English
India